கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு  வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று தொற்றான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால் கடந்த சில தினங்களாக  டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஒமிக்ரான் தொற்று அச்சத்தின் காரணமாக டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவற்றை உடனடியாக மூடவும் அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அந்த அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

Leave a Comment