பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்!
தமிழ்நாட்டில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் முகாசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதாழ் வழங்கப்பட்டு வருகின்றது.தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
அதிக அளவில் மாணவர்கள் வந்து செல்வதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பள்ளியின் நுழைவாயிலேயே உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உடனடியாக தனிமை படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். கட்டாயமாக இந்த கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டும் மீறும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
