கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும், மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கோடை வெப்பம் வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாணவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூட முடியாமல் இந்த கோடை விடுமுறையை தங்களது வீட்டிலேயே கழித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த கோடை வெப்பத்தை தணிக்க நீர்நிலைப் பகுதிகளை நாடி வருகின்றனர்.
நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை சமாளிப்பதற்காக ஊட்டி. கொடைக்கானல். குன்னூர். கேரளா சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க சில தனியார் மற்றும் அரசு பள்ளிகள் தங்களது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக, இந்த கோடை விடுமுறையிலும், கடுமையான வெப்பத்திலும் சிறப்பு வகுப்புகளை படத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் கட்டாயம் நடத்தக் கூடாது என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இணைந்து விடுத்துள்ள அந்த அறிக்கையில், தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்துள்ளது.
ஆனால் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கடுமையான கோடை வெப்பம் நிலவும் இந்த காலகட்டத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இத்தனையும் மீறி சிறப்பு வகுப்பு எடுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எடுக்கப்படும். எனவே இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு காலம் செலுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.