தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அஞ்சல் மகேஷ் அவர்கள் புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆசிரியர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :-
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 3,087 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டிருப்பது ஆகவும் இதற்கான வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தான் பணி நியமனத்திற்கு தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூடிய விரைவில் வழக்கு நிறைவடைந்து பணி நியமனம் வழங்கப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.
தற்பொழுது அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பகுதிநேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றுவதற்கான பரிசீலனையை தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதற்கான செய்தியும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக அரசின் நோக்கம் நீட் தேர்வை முழுவதுமாக நீக்குவது தான் என்றும் நீட் தேர்வை முழுவதுமாக நீக்கும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். மாணவர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்வதில் எந்த வித அரசியலும் திமுக அரசு செய்யவில்லை என்றும் இதுவரை 67 பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்களை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.