நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த வருடம் ஆரம்பத்தில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கினர். நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டது அதோடு மாணவர்களின் நலன் போன்றவற்றை கருத்தில் வைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தற்சமயம் நோய் தொற்று படிப்படியாக குறைந்து இருக்கின்ற மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக எதிர்வரும் 16ம் தேதி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உஷா தலைமையிலான ஆலோசனையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக மாணவர் சேர்க்கை மற்றும் இலவச பாடப்புத்தகம் கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.