பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!

0
174
School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!
School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர்  முருகன். முருகனின் வயது 27. முருகன் தினமும் அச்சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அச்சிறுமியை அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்வார் முருகன். நாள் நெடுவில்  அச்சிறுமி கர்ப்பம் முற்றார். இதனை அந்த சிறுமி முருகனிடம் கூறினார். இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். தன் நண்பர்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் கரு கலைப்புக்காக சித்த மாத்திரை ஒன்றை வாங்கி முருகனிடம் கொடுத்தார்கள். பின்னர் முருகன் பள்ளிக்கு செல்வதாக கூறி சிறுமியுடன் சென்றார். அவர்கள் செல்லும் வழியில் சிறுமிக்கு அந்த மாத்திரை கொடுத்தார்.

அச்சிறுமியும் அந்த மாத்திரையை முழுங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து அச்சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பதட்டமடைந்த முருகன் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்து சிறுமி ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். இச்செய்தியை சிறுமியின் தந்தையிடம் தெரிவித்தார்கள். கோபமடைந்த சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் முருகன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் போட்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் போலி மாத்திரை கொடுத்த போலி சித்த மருத்துவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.அவ்விசரணையில் போலி சித்த மருத்துவர் தானே தயாரித்த மாத்திரைகளை  கொடுத்தாரா இல்லை முருகன் நண்பர்கள் செய்த வேலையா என அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்த லிங்கை டச் செய்தால் போதும் !!திருடன் போட்ட பிளான் ?பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!
Next articleமாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்! இப்படியும் நடக்குமா?