நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!!

0
121
School holiday due to landslide!! Deputy Commissioner Notice!!
School holiday due to landslide!! Deputy Commissioner Notice!!

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் சில நாட்களாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில், ஹிமாசலப் பிரதேசத்திலும் தற்போது அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

இதனால் கின்னார் பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னார் பகுதியின் துணை ஆணையர் கூறி இருப்பதாவது,

மாநிலம் முழுவதும் தற்போது எங்குப் பார்த்தாலும் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை சாங்லா மற்றும் நெச்சர் பிரிவில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை என்று கூறி உள்ளார்.

அனைத்து அரசு மற்றும் தனியார் அங்கன்வாடி பள்ளிகளுக்குமே ஜூலை 22 வரை விடுமுறை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கான துணைப்பிரிவு நீதிபதிகள் மழை பெய்வதை பொறுத்து இந்த உத்தரவை திருத்தி அமைக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

இந்த கனமழையால் அதிகமாக நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டு வருகிறது. இந்த மழையில் சிக்கி இதுவரை பன்னிரெண்டு பேர் மாயாமாகியும், 130 பேர் இறந்தும் மற்றும் 153 பேர் காயமும் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த நிலச்சரிவால் 572 வீடுகள் சேதமடைந்தும், 4703 வீடுகள் சிறிதளவு சேதமடைந்தும் உள்ளன. இதனுடன் சேர்ந்து 148 கடைகளும் சேதமடைந்துள்ளது எனவே, ஹிமாச்சல மாநிலமே ஒரு பேரழிவை சந்தித்து வருகிறது என்றும் கூறி உள்ளார்.

Previous articleஅடேங்கப்பா 20 ரூபாய்க்கு இவ்வளவு உணவுகளா?? ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான செய்தி!!
Next articleஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!!