பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
323

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைநகர் புதுடில்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையும், மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரமாக வேலைக்கு செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதிலும் நமது நாட்டின் தலைநகரான டெல்லியின் அருகே உள்ள நொய்டாவில் மிக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இயலாமல் பலவித சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்படுகின்றது. இதனால் அனைவரும் குறித்த நேரத்தில் பணிக்கோ, பள்ளிக்கோ செல்ல இயலாத சூழ்நிலை உருவாகிறது.

அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி-1 வரை விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடுமுறை எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கௌதம் புத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோன்று உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள பள்ளிகளின் நேரம் கடும் பனிப்பொழிவு காரணமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாலை 3 மணி வரை செயல்பட டிசம்பர் 31ஆம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Previous articleஇந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Next articleஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்!