மீண்டும் விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-அரசு தரப்பில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு

Photo of author

By Rupa

மீண்டும் விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-அரசு தரப்பில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு

கொரோனா கால கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல அரசு தடை விதித்திருந்தது.இதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.கடந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசாங்கம் அறிவித்தது.இதனையடுத்து மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வருடம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டதால் சில மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் பயின்றாரகள்.மற்ற சிலர் வகுப்புகளை கற்காத காரணத்தால் இந்த வருடமும் அரசாங்கம் பொதுத்தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது.

ஆனால் இதை மறுக்கும் விதத்தில் தனியார் பள்ளிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டது.அதாவது மாணவர்களுக்கு தேர்வின்றி அவர்களுக்கு குரூப் பிரிக்க முடியாது. ஆகையால் மாதிரி தேர்வு நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்தது.இந்நிலையில் மாணவர்கள் தினந்தோறும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை பின்பற்றி பள்ளி சென்று வருகின்றனர்.அவர்களுக்கு 6 நாட்கள் பள்ளியும் 1 நாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறையும் அளித்து வந்தன.

சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் 6 நாட்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். மீதமுள்ள அந்த ஒரு நாள் விடுமுறை என்றாலும் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் அவர்கள் விடுமுறையின்றி வேலை பார்த்து வருகின்றனர்.இதன் காரணமாக பணிச்சுமை அதிகமாகிவிட்டது என ஆசிரியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

ஆகையால் ஒரு நாள் விடுப்பு அளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இவர்களின் கோரிக்கைக்கு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.இதனையடுத்து சனிக்கிழமை ஒரு நாள் அவர்களுக்கு விடுப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அறிவித்தால் மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை வரவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.