மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

Photo of author

By Gayathri

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

Gayathri

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிகளுக்கான திறப்பு தேதி ஜூன் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.

 

எனினும் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரத்திற்கு பின் பள்ளிகளை திறக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் கோரிக்கை இருந்து வருகிறது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :-

 

திருச்சியில் இருக்கக்கூடிய தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அண்ணன் மகேஷ் பொய்யாமொழி மே தின நினைவுச் சின்னத்தில் மாலை அணிவித்த பொழுது செய்தியாளர்களிடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்க தாமதமாகும் என்றும் ஆனால் இதற்கான முடிவை தமிழக முதல்வர் அலுவலகம் தான் எடுக்க வேண்டும் என்றும் அதன் பிறகு முதல்வர் சொல்வது போல விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.