12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன் முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியாகியது. மேலும் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு அவரவர் மதிப்பெண் குறித்த விவரம் குறுஞ்செயதியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பொதுத்தேர்வில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், 96.99% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் ஈரோடு மாவட்டமும், 96.39% தேர்ச்சியில் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த தேர்வு எழுதிய பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வினை சிறையிலுள்ள 62 கைதிகள் எழுதினர். இதில் 50 சிறைக்கைதிகள் தேர்வில் வெற்றி பெற்றது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இச்செய்தி சிறை கைதிகளுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.