வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு!

Photo of author

By Jayachandiran

வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு!

அரசு பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் படிக்க அதிகம் செலவாகிறது என்பதாலும், வீட்டுக்கு பாரமாக இல்லாமல் ஊரைவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை காஞ்சி கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த தருண்ஸ்ரீ, விஜய், மவுலி, மிதுன் ரித்தீஷ் நால்வரும் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவர்கள் மாயமான தகவலை அறிந்த பெற்றோர்கள் பதட்டத்துடன் காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர்.

இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணை நடத்தியதில், படிப்பதற்கு அதிகம் செலவாகிறது என்பதால் வீட்டுக்கு பாரமாக இல்லாமல் மாணவர்கள் ஊரைவிட்டு ஓடியது தெரியவந்தது. இதன்பிறகு, ஒவ்வொரு மாவட்ட காவல்நிலையத்திற்கும் இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் நால்வரும் விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் காவல்துறையினர் மாணவர்களை மீட்க விரைந்துள்ளனர்.