பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

0
162

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் மாணவர்களை தினந்தோறும் வாங்கி வரச்சொல்லி வேலை வாங்குகின்றனர். ஆசிரியர் சொன்னபடியே மாணவர்களும் வேலையை செய்கின்றனர்.

பந்தல்குடியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பல்வேறு வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இந்த ஆபத்தான சாலையை கடந்து தான் மாணவர்கள் தினந்தோறும் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க வேண்டும். படிக்கும் மாணவர்களை டீ வாங்க சொல்வது தவறு என்று அப்பகுதி மக்கள் பலமுறை தலைமை ஆசிரியரிடம் எடுத்துக் கூறியும், இது எனது பள்ளி எனக்கு தெரியும் என்று சர்வசாதாரமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை இது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. தற்போது மாணவர்கள் டீ வாங்கி வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில வாரங்களுக்க முன்பு அரசு பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவமும் செய்திகளில் வெளியாகியது. பள்ளி மாணவர்களை எந்த வேலையும் வாங்க கூடாது என்று நீதிமன்றமும் ஏற்கனவே கூறியுள்ளது. விருதுநகர் நுழைவு, காமராஜரின் திருவுருவச் சிலையை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!
Next article11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!