நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 7 ஜூலை 2025 அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை திட்டி நாளை நீ பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வா என்று மிரட்டியுள்ளார்.
பெற்றோரை அழைத்து வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்த அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தான். பின்னர் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தனர்.
17 ஜூலை 2025 அன்று அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி மீதும், அந்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த தனியார் மருத்துவமனை இருந்த ரோட்டில்(நெல்லை பாபநாசம் சாலையில்) 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் மாணவரின் உறவினர்களை சமாதானப்படுத்தி நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவரின் உறவினர்கள் தனியார் பள்ளிக்கு சென்று நள்ளிரவில் இரண்டு பள்ளி பேருந்துகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இரண்டு பேருந்துகளும் தீயில் முழுமையாக கருகி சேதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.