ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

0
240
#image_title

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் வழக்கமாக எப்பொழுதும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து  காணப்படுவதால் மாணவர்களின் நலன் கருதி இரண்டு முறை பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து வருகின்ற ஜூன் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  பள்ளிகள் திறப்பு நடைபெறுவதை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் மாணவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு 650 பஸ்கள் மற்றும் மற்ற முக்கிய இடங்களுக்கு 850 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது.

இதன் அடிப்படையில் நாட்டின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, போன்ற நகரங்களில் இருந்து நாட்டின் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறையானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Previous article12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!
Next articleஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு!