இந்த வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றானது எந்த மாற்றமுமின்றி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அதிலிருந்து மீண்டு தங்களது நடைமுறை வாழ்க்கை வாழ பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டால் இத்தொற்று இடம் தெரியாமல் ஆகிவிடும் என நினைத்த எண்ணங்கள் எல்லாம் கனவாகி சிதைந்தது. மனிதர்கள் ஆண்டுதோறும் வளர்வது போல இந்த தொற்றும் ஆண்டு தோறும் மனிதர்களோடு மனிதர்களாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அந்தவகையில் இந்த தொற்றானது கொரோனாவில் இருந்து டெல்டா ,டெல்டா ப்ளஸ் ஆக உருமாற்றம் அடைந்தது. தற்பொழுது ஒமைக்ரானாக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்தத் தொற்று தென்னாப்பிரிக்காவில் உருவானது. அதனை அடுத்து நமது இந்தியாவில் மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு அதிகரித்தது.தொற்று பாதிப்பால் அனைத்து மாநிலங்களிலும் பல கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வந்தது. அவ்வாறு அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டது.
தற்பொழுது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அவ்வாறு குறைந்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. அந்த மாநிலத்தில் தற்பொழுது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் பள்ளிக்கு வந்து நேரடியாக பாடங்களை பயின்று வருகின்றனர்.அதேபோல மும்பை ,பூனே போல பெருநகரங்களில் தொற்று பாதிப்பு பெரும்பான்மயாக குறையவில்லை.
அதனால் பெற்றோர் விருப்பத்திற்கு ஏற்ப அவரவர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம் என அவ்வரசாங்கம் கூறியுள்ளது. நமது தமிழகத்திலும் வரும் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புகள் குறையுமாயின் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்.