என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

0
83

என்ன ஒமிக்ரான் வைரஸ் சமூக தொற்றாக பரவியதா? மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த  உருமாறிய கொரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸை காட்டிலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியாவிலும் நுழைந்தது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது இந்த ஒமிக்ரான் வைரஸ். தற்போது இந்தியா முழுவதும் இந்த ஒமிக்ரான் தொற்றானது பரவியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற இன்சாகோக் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ள அலையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் முதன்முறையாக ஒமிக்ரானின் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. ஒமிக்ரானின் இந்த புதிய வகை மாறுபாட்டுக்கு பிஏ.2 என பெயரிடப்பட்டது. ஒமிக்ரானின் இந்த புதிய மாறுபாடான பிஏ.2 டென்மார்க், நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரானின் இந்த புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் தற்போது ஒமிக்ரானின் புதிய மாறுபாடான பிஏ.2 இந்தியாவில் ஒருசில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஒமிக்ரான் தற்போது சமூக பரவலாக மாறி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பெரிய நகரங்களில் இந்த ஒமிக்ரான் தொற்றின் தாக்கமானது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.