திறக்கப்படும் பள்ளிகள்! தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்!

Photo of author

By Sakthi

சென்ற 9 மாதங்களுக்கு அதிகமாக மூடப்பட்ட இருக்கின்ற பள்ளிகள் நாளை முதல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்றின் தாக்கம் தற்சமயம் வெகுவாக குறைந்து இருப்பதால், பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பின்னர் பள்ளியை நடத்தலாமா? என்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த கருத்துக்களின் அடிப்படையிலேயே நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையான வழிகாட்டு விதி முறைகளின்படி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே மிக கவனத்துடன் இருக்க வேண்டும் அது ஒரு தனிநபர் இடைவேளை கட்டாயம் பள்ளிகளை திறப்பதற்கு முன்பு தனியார் பள்ளிகள் தமிழக அரசிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் ஆறு தினங்கள் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும், விருப்பம் இருக்கின்ற மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பள்ளிகளில் மேசைகள், வகுப்பறைகள், போன்றவற்றை எப்படி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நெறிமுறைகளை ஒவ்வொரு பள்ளியும் பின்பற்ற வேண்டும். அதனை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்றைய தினம் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை செனாய் நகரில் இருக்கின்ற திரு வி கா மேல்நிலைப் பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த கண்ணப்பன், அரசாங்கம் அறிவித்தது போல நாளை முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. அவர்களின் கருத்துக்கள்படியே பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. ஆகவே மாணவர்கள் நாளை முதல் முககவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே மாணவர்கள் வகுப்பறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.