தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா!

0
229

தமிழகத்திலே சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய தின டெல்லி பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணமானது தமிழக அரசியலில் முதல்வரின் ஆளுமையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் திமுக போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்ற காரணத்தால், அரசியல் நோக்கர்கள் இந்த பயணத்தை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து ஒரு சிலரிடம் உரையாடியபோது,

ஆளும் கட்சியான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக சர்ச்சையை உண்டாக்கி அதன் மூலமாக அரசியல் செய்வதற்கு ஒரு சில எதிர்க்கட்சிகள் முயன்று கொண்டிருக்கின்றன. அவர்களின் எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தான் திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

ஆனாலும் தமிழகத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஒரு சிலர் இது தொடர்பாக சில எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்ற நிலையில், அதுதொடர்பாக பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி மூலமாக அதிமுக பிரச்சார ஆரம்பக்கட்டத்திலேயே அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி அதிமுக தலைமை அறிவித்திருக்கின்றன எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று காட்டமாக தெரிவித்தார்.

நடப்பு மாதம் ஒன்பதாம் தேதி அன்று சென்னையில் நடந்த அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்கின்றோம் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பாஜக எடப்பாடி இப்படி ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் தலைவர் முருகன் உடனடியாக கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து உரையாடி இரு கட்சிகள் இடையே இருக்கின்ற நல்வரவை சரிப்படுத்தும் விதமாக பேசி இருக்கின்றார். பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி அவர்களும் அதிமுகவே எங்களுடைய கூட்டணியில் மிகப்பெரிய காட்சி நாங்கள் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறிய கட்சியாகவே முதலமைச்சர் வேட்பாளரை அவர்கள் தான் தீர்மானம் செய்வார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரமானது தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் ஆளுமையை காத்திருப்பதாக பார்க்கப்படுகின்றது. அவருடைய இந்த வளர்ச்சியை பார்த்து திமுக சற்று ஆடிப்போய் இருப்பதாக சொல்கிறார்கள். ஆட்சியிலும் கட்சியிலும் அதிகரித்துவரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை தமிழக மக்களிடையே அவருடைய செல்வாக்கை அதிகரித்து இருக்கின்றது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரு தின பயணமாக இன்றையதினம் டெல்லிக்கு சென்றிருக்கிறார். அங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான பல திட்டங்கள் நிதி உதவி போன்ற கோரிக்கை மனுக்களை கொடுக்க இருக்கின்றார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து உரையாடும் தமிழக முதலமைச்சர், தமிழக அரசியல் நிலை பாஜக போன்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாஜகவிற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவதற்கு எடப்பாடி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் விவாதம் செய்து நேரத்தை விரயமாக்க முதலமைச்சர் விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே நேரடியாக பாஜகவின் தேசிய தலைமை உடனேயே பேசி விடலாம் என்ற ஒரு முனைப்பில் இந்த பயணத்தை முன்னெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். வழக்கம்போல இந்த பயணத்தை வெற்றிகரமாக சாதித்து காட்டுவார் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுகவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.