மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
99

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

தமிழக மற்றும் இதர மாநிலங்களில் அவர்களின் படிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பள்ளி சீருடைகள் என ஆரம்பித்து சைக்கிள் மடிக்கணினி போன்றவற்றை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நமது தமிழகத்தில் காலை மதிய உணவு போன்றவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இதுவே மாநிலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சலுகையும் மாறுபடும்.

அந்த வகையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிதிவண்டியும் அதுவே உயர் கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டரும் வழங்கி வருகின்றனர். இந்த திட்டமானது மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதோடு அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஊந்துகோலாக இருக்கும்.

மேற்கொண்டு இந்த திட்டம் மூலம் தொலைதூரத்திலிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் பயனடைவர். அதுமட்டுமின்றி இவர்களுக்கு வழங்கப்படுவது ஈ ஸ்கூட்டர் என்பதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நெறிமுறைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்த திட்டமானது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் ரூ.167 .95 கோடி ஒதுக்கி உள்ளதாக கூறி உள்ளனர்.

மேல்நிலை பல மாணவர்கள் தங்களின் தொலைதூர இடைவெளியால் கல்வி கற்க முடியாமல் போகிறது.எனவே இந்த இடை நிற்றலை தவிர்க்க ஸ்கூட்டர் வழங்குவது பெரும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் திட்டம் அமைந்துள்ளதால் இதற்கு அடுத்து வரும் மாணவர்களின் கல்வித் திறனும் அதிகரிக்கும்.

Previous articleரூ 210 செலுத்தினால் மாதம் 5000!! மத்திய அரசின் அசத்தல் திட்டம் உடனே விண்ணப்பியுங்கள்!!
Next article50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்!! விவாயிகளே உடனே புக் பண்ணுங்க!!