50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்!! விவாயிகளே உடனே புக் பண்ணுங்க!!

0
48

50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்!! விவாயிகளே உடனே புக் பண்ணுங்க!!

 

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதில் மத்திய அரசானது பி எம் கே கிசான் என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ 12000 தொகையை தவணையாக அவர்களது வங்கி கணக்கு இருக்கு செலுத்தி வருகிறது. இதே போல மாநில அரசும் கால்நடை வளர்ப்பு போன்ற மற்றொரு மானியம் வழங்கி வருகிறது.

 

இதனிடையே சிறு மற்றும் குரு விவசாயிகளை வளர்க்கும் பொருட்கள் திருச்சிராப்பள்ளியில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது சிறு மற்றும் குரு விவசாயிகளால் பெரிய உபகரணங்கள் எதுவும் செலவிட்டு வாங்க இயலாது.

 

எனவே இவர்களுக்கு உதவும் வகையில் விவசாயத்திற்கு தேவைப்படும் டிராக்டரில் இருந்து ரோட்டவேட்டர் போன்ற கருவிகள் வரை அனைத்தும் மானிய விலையில் வாடகைக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். விவசாயத்திற்கு தேவைப்படும் அனைத்து கருவிகளையும் 50% மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

 

இதனடிப்படையில் டிராக்டரை 50 சதவீதம் மானிய விலையில் வாடகைக்கு எடுக்கும் பட்சத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ 250 வரை வசூலிக்கப்படுகிறது. ஐந்து மணி நேரம் அல்லது ஐந்து ஏக்கர் நிலத்திற்கு ரூ 1250 வரை வசூலிக்கப்படும். அவர் இவர்கள் வழங்கும் தொகையிலிருந்து 50 சதவீதம் மானியமாக ஒரு முறை பெற்று கொள்ளலாம். இது ஒவ்வொரு நிலத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த மானிய சேவையை பெறுவதற்கு விவசாயிகளிடம் வேளாண்மை சான்றிதழ் பட்டா சிட்டா போன்றவை இருப்பது கட்டாயம்.

 

அதுமட்டுமின்றி இரெண்டல் என்ற ஆப் மூலம் முன்கூட்டியே புக்கிங் செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டமானது சிறு குறு விவசாயிகளை வளர்த்துவிடும் பட்சத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேற்கொண்டு இவர்களை ஊக்குவித்த அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவுகிறது.