விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!

Photo of author

By CineDesk

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள். நிதி அற்புதமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண்மனக்கு குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலை கொடுக்கும். அரசியல்வாதிகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில திட்டங்களை தீட்டுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும்.