தொப்பை இருக்கின்றது என கவலையா? இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து குடித்தால் போதும்!

0
72

தொப்பை இருக்கின்றது என கவலையா? இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து குடித்தால் போதும்!

பெரும்பாலானோர் அதிகம் கவலைப்படும் விஷயமாக இருப்பது தொப்பை தான். 5 நாட்களில் எப்படி தொப்பையை குறைப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தொப்பை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பது தான்.

மேலும் உணவு முறைகள் சரியில்லாத காரணத்தினாலும் தொப்பைகள் ஏற்படும். இதற்காக முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு பட்டை தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு கலந்த பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 5 நாட்களில் தொப்பையானது குறைய தொடங்கும்.

குறைவான காலத்தில் தொப்பை குறை வேண்டும் என்றால் இதனை ஒரு டம்ளர் குடித்துவிட்டு பிறகு சிறு சிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையும் குறையும்.

நம் உணவில் வெள்ளை சர்க்கரை அதிக அளவு சேர்த்துக் கொள்வதினாலும் தொப்பை ஏற்படுகிறது அதனால் இனிப்பு சுவை வேண்டுமென்றால் அந்த பொருட்களில் தேன் சேர்க்க முடிந்தால் தேனை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

author avatar
Parthipan K