விருச்சகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாள்!!

0
209

விருச்சகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாக அமையும். தொழில் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுமை கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் மறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டி வரலாம். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் கவனம் அதிகமாக இருப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகலாம். நண்பர்கள் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து தருவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும் என்றாலும் புதிய முதலீடுகளை ஒரு முறை யோசித்து செய்வது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றி மறையும். மூத்த வயதை சென்றவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!
Next articleதனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here