இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பவுலர்களை சிதறடித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரில் இந்திய அணி நடைபெறும் மொத்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு மிகபெரிய பின்னடைவை எற்படுதியுள்ளது.
இந்நிலையில் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட 5 5வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 4 சிச்ஸ்சர் என அடித்து 61 ரன்கள் அடித்தார். இதுவரை டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் 29 பந்துகளில் அரைசதம் விளாசினார்.