கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

0
127
Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!
Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

பொதுமக்கள் வந்து போகின்ற சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கன்னியாகுமரி கடற்கரை ஆகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கடலின் நீர் அலையை ரசித்து அதில் விளையாடி செல்கின்றனர்.

ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்டதிலிருந்து அமாவசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றமாகவும் நீர் உள்வாங்குவதாகவும், காட்சி அளிக்கிறது.

பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டமானது உள்வாங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலைக்கு செல்கின்ற படகு போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து இல்லாமல், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது இன்று காலை பத்து மணி அளவில் கடல் சீற்றம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.

எனவே, படகு போக்குவரத்து இன்று துவங்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலையை அருகில் பார்த்து மகிழ்ந்தனர்.

கடலில் சீற்றம் ஏற்பட்டதால் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து கன்னியகுமாரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி மற்றும் மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

இதனால் இந்த பகுதியில் உள்ள கடற்கரையில் பத்து அடி முதல் பதினைந்து அடி வரை ராட்சத அலைகள் வேகமாக வீசுகிறது.

Previous articleபள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!
Next articleஇனி ட்விட்டரில் இருட்டு வசதி  வசதி மட்டுமே!! ட்விட்டர்  நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்!!