கடல் உப்பு Vs இந்துப்பு: உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எதுவென்று தெரியுமா?

Photo of author

By Rupa

உணவின் சுவையை அதிகரிக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது.உப்பு இல்லாத உணவின் ருசி மாறிவிடும்.அதேபோல் உணவில் உப்பை கூடவோ,குறையவோ சேர்த்தால் சுவை முழுமையாக மாறிவிடும்.எனவே உணவு சுவையாக இருக்க உப்பை அளவாக சேர்க்க வேண்டியது அவசியம்.பெரும்பாலான இந்திய உணவுகளில் உப்பு சேர்க்கப்படுகிறது.

முப்பெல்லாம் கல் உப்பு மட்டும் பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது இந்துப்பு பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது.கல் உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது வெள்ளை நிறத்தில் கிரிஸ்டல் போன்று காணப்படும்.

அதேபோல் இந்துப்பு(பிங்க் உப்பு) இமாலய பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.சாதாரண உப்பை காட்டிலும் இந்துப்பில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.இதில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதன் நிறம் பிங்காக தெரிகிறது.

கல் உப்பை காட்டிலும் பிங்க் உப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதில் கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகளவு நிரம்பியிருக்கிறது.இது உணவில் சேர்த்துக் கொள்வதால் எலும்பு வலிமையாகும்.பிங்க் உப்பை நீரில் கலந்து தலைக்கு குளிப்பதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.பிங்க் உப்பை சுடுநீர் கலந்து ஆவி பிடிப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.பிங்க் உப்பில் இருக்கின்ற’சோடியம் க்ளோரைட் என்ற கனிமம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.