ஸ்டாலினின் முதன்மை செயலார்க்கு சீமான் பாராட்டு!! நேர்மை, திறமை, சமூகப்ற்று கொண்ட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Photo of author

By CineDesk

ஸ்டாலினின் முதன்மை செயலார்க்கு சீமான் பாராட்டு!! நேர்மை, திறமை, சமூகப்ற்று கொண்ட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!!

தமிழகத்தின் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்து வெற்றிப் பட்டியல்கள் வெளி வந்த நிலையில் இன்று தலைமை செயலராக  வெ. இறையன்பு அவர்களையும் மற்றும் முதல்வரின் முதன்மைமை செய்யலாளராக உதய சந்திரன் அவர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியாம்பிக்கப்பட்டுள்ளதற்கும் தமிழக முதல்வரின் முதன்மைச் செயலராக உதயச்சந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளதற்கும்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது முதல் டுவீட்ல் தெரிவித்ததாவது: தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! என்று கூறியிருந்தார்.

மற்றும் அவர் தனது இரண்டாவது டுவீட்ல் தெரிவித்ததாவது: மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல் கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. என்று சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.