தமிழ் ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார்.
என்னதான் சிந்து சமவெளி படத்தில் அந்த மாதிரி நடித்தாலும் மைனா படம் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி விட்டது .அந்த அளவுக்கு மைனா படத்தில் நடித்து தன் திறமைகளை வெளிப்படுத்திருப்பார் நடிகை அமலாபால்.
மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தன் திறமைகளை காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
பின்பு விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம் என வரிசையாக முன்னனி நடிகர்களுடன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், இவர் வேலையில்லா பட்டதாரி , வேட்டை, நிமிர்ந்து நில் , தெய்வ திருமகள் என பல திரை படங்களில் நடித்து இருப்பார்.
பின்பு நல்ல மார்க்கெட் இருக்கும் போதே இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். ஓராண்டுக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து மீண்டும் அவரை சினிமா ரசிகர்கள் ஏற்க மறுத்த நிலையில், கிளாமர் காட்ட ஆரம்பித்தார். ஒரு சில படங்களில் நடித்த அவர் ஆடை படம் மூலம் கவர்ச்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதோடு நிறுத்தாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். தற்போது தெலுங்கில் கோஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடிக்க இருக்கிறார்.
அதில் சமந்தாவின் முன்னாள் மாமனாரும், நடிகருமான நாகர்ஜூனாவுடன் நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் காஜல் அகர்வால்.
ஆனால் லிப் லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியதால் அமலா பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கூட லிப் லாக் செய்ய நான் ரெடி என அமலா பால் கமிட் ஆகி இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.