அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக! கடும் அதிருப்தியில் அதிமுக

Photo of author

By Parthipan K

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக! கடும் அதிருப்தியில் அதிமுக

2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.அதிமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளை கேட்ட பாமகவிற்கு ராஜதந்திரமாக செயல்பட்ட அதிமுக தலைமை இட ஒதுக்கீடு தருகிறோம் என செக் வைத்து வெறும் 23 தொகுதிகள் மட்டும் ஒதுக்கி கூட்டணியை உறுதி செய்துள்ளது.

அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ தொகுதி கூட வெற்றி பெற்றிராத நிலையில் அதிமுக தரப்பு அவர்களையும் திருப்தி படுத்தும் விதமாக பாமகவிற்கு இணையான தொகுதிகளை வழங்கியுள்ளது. இவ்வாறு அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவின் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் அவர்கள் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் அடுத்து அதிமுகவின் கூட்டணியில் உள்ள மூன்றாவது கட்சியான தேமுதிகவை, கூட்டணி பற்றி பேச அழைக்கவில்லை என்று கடந்த ஒரு வாரமாக பிரேமலதா அவர்கள் பேசி வந்த நிலையில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள்.

தேமுதிகவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தேமுதிக தரப்பு 30 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கேட்பதாகவும். ஆனால் அதிமுக அரசு 15 தொகுதிகள் மட்டுமே தருவதாகவும் பேசி வருகிறார்கள்.

மேலும் இதுவரை ஒரு எம்எல்ஏ தொகுதி கூட வெற்றி பெறாத பாஜகவிற்கு 21 தொகுதிகள் கொடுக்கும் போது ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது நாற்பத்தொரு தொகுதிகளை பெற்று அதில் 29 தொகுதிகள் அபாரமாக வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது 30 தொகுதிகளாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம் தேமுதிக தலைமை.

ஆனால் அதிமுக தலைமையோ 2011 ல் உள்ளது போல் தற்போது தேமுதிகவுக்கு செல்வாக்கு இல்லை.கடந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அதனால் 15 தொகுதிகள் தான் தருவோம் என்று கண்டிப்பாக பேசியுள்ளார்களாம்.

அதே போல் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பற்றி பேச இன்று மதிமுகவையும், விசிகவையும் திமுக தலைமை அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.