இரண்டாவது நாளாக தொடரும் ரெய்ட்…. திரையுலகில் தொடரும் பரபரப்பு!

Photo of author

By Vinoth

இரண்டாவது நாளாக தொடரும் ரெய்ட்…. திரையுலகில் தொடரும் பரபரப்பு!

சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில் அவர் பணம் கொடுத்ததாக சில தயாரிப்பாளர்களின் பெயர்கள் சிக்கின. அது சம்மந்தமாக  தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களான எஸ் ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, தாணு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த சோதனையை அடுத்து இன்று மீண்டும் சோதனை தொடர்கிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என தெரியவில்லை.

ஆனால் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெறுவதால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சம்மந்தப் பட்ட தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.