இரண்டாவது ஒருநாள் தொடர்! டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் 152-7 வெற்றி கணக்கை தொடருமா இந்தியா?
இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை எடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று கொல்கத்தாவின் புகழ் பெற்ற மைதானமாகிய ஈடன் கார்டனில் இன்று பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி பந்து வீசி வருகிறது. தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக யுஸ்வேந்திர ஷாகல் இந்த 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
புகழ்பெற்ற கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 21 போட்டிகளில் இந்தியா விளையாடி 12ல் வெற்றியும் 8-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை.
தற்போதைய தகவலின் படி இலங்கை அணி 28 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.