முதலமைச்சர் மற்றும் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் தொலைப்பேசி மூலம் ரகசிய ஆலோசனை!! விஜயகாந்த் கூறியது என்ன??
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திமுக அணி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தின் மத்திய முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இதுவே முதல் முறை முதலமைச்சராக இருப்பது.
இதை தொடர்ந்தது பல கட்சி தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல சினிமா பிரபலங்களும் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்கள்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் முதலமைச்சர் பதவி ஏற்றதற்காக ராமதாஸ் அவர்களின் இருந்தது வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.. மேலும் முதலமைச்சரான தனக்கு ஆலோசனைகளை வழக்குமாறு ராமதாஸ் அவர்களிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடந்து ராமதாஸ் அவர்களுக்கு தமிழக அரசுக்கு தனது அதிகாரப்பூர்வமான ஆலோசனைகளை வழக்குவேன் என்று உறுதியளித்தார்.
மேலும் கொரோனா பரவல் 2 ஆம் அலை மக்களிடையே அதிவேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டே தொலைபேசியின் மூலம் அழைத்ததாகவும், மற்றபடி தங்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்வத்தில் தான் எனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்தது தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.