கறிவேப்பிலை அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன் மிக சிறந்தது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை தடுக்கலாம். அது இரத்த சோகையை குணப்படுத்த மிக சிறந்த ஒன்று. இந்த இலை போதுமான அளவு இரும்பு சத்தையும், போலிக் அமிலத்தன்மையும் கொண்டுள்ளது. இதனால் ரத்த சோகைக்கு சிறந்தது என கூறப்படுகிறது.
மேலும் பாக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தி கருவேப்பிலையில் உள்ளதால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த ஒன்று. முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை உதவியாக உள்ளது. மேலும் கறிவேப்பிலையின் சாறு நீரிழிவு நோய்க்கு மிக சிறந்த தீர்வு ஆகும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-சி உடன் கேம்ப்ரல்பல் என்ற சத்துக்கள் இருப்பதால் கல்லீரல் மிக நன்றாக செயல்பட உதவுகிறது.
இந்த இலையில் வைட்டமின்-ஏ அதிகம் இருப்பதால் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்த்து அவற்றை வலு பெற செய்கிறது. கறிவேப்பிலை மாதவிடாய் சிக்கல்களை தவிர்த்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை வலுப்படுத்த பயன்படுகிறது. வாந்தி, பசியற்ற நிலை, சளி போன்றவற்றிக்கு இது உதவியாக இருக்கும். எனவே தினமும் இந்த கறிவேப்பிலை இலையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் சாப்பிடும் போது அதை தூக்கி எறியாமல் உணவில் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு வரும் பல நோய்களை தடுக்க முடியும்.