கண் ஷார்ப்பாக தெரிய.. கண்ணாடியை கழட்டி வீச இந்த இலையை இவ்வாறு சாப்பிடுங்கள்!!

Photo of author

By Vijay

அனைவருக்கும் கண் மிக முக்கியமான உறுப்பாக இருக்கின்றது.ஆனால் இன்று பலர் கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் பார்வை கூர்மையாக கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலை சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் சுவையான துவையல் செய்து சாப்பிடுங்கள்.

முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசவும்.பிறகு ஒரு காட்டன் துணியில் கறிவேப்பிலையை பரப்பி நன்கு உலரவிடவும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு வெது வெதுப்பான நீர் ஊற்றி நன்கு ஊறவிடவும்.அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கடுகு இரண்டு தேக்கரண்டி,கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி,வெந்தயம் ஒரு தேக்கரண்டி போட்டு மிதமான நன்றாக சிவந்து வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

பிறகு அதை நன்றாக ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.அடுத்து அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் நான்கு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி கலவை மற்றும் கறிவேப்பிலை பொடியை கொட்டி வதக்கவும்.அடுத்து கரைத்து வைத்துள்ள புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து கடுகு,வர மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து வதங்கி கொண்டிருக்கும் கறிவேப்பிலை கலவையில் சேர்க்கவும்.இந்த கறிவேப்பிலை விழுதை தினமும் உட்கொண்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.கறிவேப்பிலை விரும்பத்தவர்களுக்கு இதுபோன்று செய்து கொடுக்கலாம்