பொதிகை மலை என்பது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத் தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. 1995 ஆண்டுக்கு முன்வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பின் காரணமாக இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது.
இதனால் மலையின் மறுபக்கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை மலைக்கு யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. இணையம் மூலம் முன்பதிவு செய்பவர்களிடம், உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணையுடன் கேரள வனத்துறை பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூசைகள் நடத்துவர். தற்பொழுது கேரளா வனத்துறை அகத்தியருக்கு பூஜைகள் மேலே செய்வதற்கும் அனுமதி தருவதில்லை. மொத்தம் இது மூன்று நாள் நடை பயணம்.
இரண்டாவது நாள் நடை பயணத்தில் சூழல் சரிவர இருந்தால் மட்டுமே வனத்துறை மேலே அனுமதிப்பார்கள் அகஸ்தியரை பார்ப்பதற்கு. கடின பணிப்பொழிவு மற்றும் மழை இருந்தால் கட்டாயம் அனுமதிக்க மாட்டார்கள். பஞ்சுப்பொதி போன்ற மேகக்கூட்டங்கள் மலையைத்தழுவிக்கிடக்கும் இடம் என்பதால் பொதிகை எனப்பெயர்பெற்றது. இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி ஆறு உருவாகிறது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுகிறார்கள்.