நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்..!!

Photo of author

By Jayachandiran

நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் கவால் நிலையத்தில் புகார்..!!

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செய்த நாம்தமிழர் கட்சியின் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ராஜீவ்காந்தியின் நினைவிடமும் ஒன்றாகும். இங்கு தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நினைவிடத்திற்கு சென்ற சீமானின் தம்பி துரைமுருகன், தனது அண்ணன் மேல் இருக்கும் தீராத பாசத்தால் அவர் மேடையில் பேசிய டயலாக்கை டிக்டாக் மூலம் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவர் பேசிய வசனம் இதுதான்; என் இனத்திற்கென்று ஒரு பெருமை உண்டு எனவும், நீ எப்பேர்பட்ட கொம்பனாக இரு, எந்த நாட்டுக்கு அதிபராகவும் இரு என் இனத்தை தொட்டால் இதுதான் கதி என்று ராஜீவ் காந்தியின் உருவபடத்தை சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தான் எங்கு என்ன பேசுகிறோம் என்பதை கூட யோசிக்காமல் ஆர்வத்தில் பேசி தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்புடன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நாதகவின் துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர்.