சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

0
147

தமிழக முதலமைச்சர் பற்றி பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை, எதிர்த்து சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.அந்த பேட்டியில் தமிழக அரசின் அதிகாரம்
மத்திய அரசிடம் தான் உள்ளது, மாநில அரசுக்கும்,
முதலமைச்சர்க்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்று
முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சீமான் மீது தமிழக முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து முதலமைச்சரை பற்றி தனிப்பட்ட முறையில்
விமர்சனம் செய்யவில்லை என்றும் பொது வாழ்க்கையில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகளை தான் விமர்சனம் செய்தேன்.
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசினேன் அதனால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக முதலமைச்சர் குறித்து சீமான் கடுமையான வார்த்தைகளால் அவதூறாக பேசினார் என்று அரசு தரப்பில் வாதிட்ட குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Previous articleதிருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு
Next articleஉயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!