இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

0
187

இந்தியாவின் கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

அந்தக்குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சார்பாக பிரதிநிதிகளைச் சேர்க்காமல் முழுவதுமாக புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கையில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளதாவது, “இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரு்ம சதி என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

 

அக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதன் மூலம் அது தெளிவாகிறது”

 

மேலும், “இதோடு மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை என்பதும் அதனை மெய்ப்பிக்கிறது” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

“50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்குடியான தமிழ்ப் பேரினத்தின் வரலாற்றை, தமிழ்மொழியின் தனித்துவமிக்க சிறப்பையும், அளப்பெரும் பெருமையையும், தமிழ் மண்ணின் செழுமைமிக்க மரபையும், பண்பாட்டையும் அழியாக, சிறிதும் தொடர்பற்ற ஒரு கூட்டம் வரலாற்றை எழுதுமாயின் அது தமிழர்களைச் சிறுமைப்படுத்தும் வரலாறாகவே அமையும் ” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இதனால், இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவிருக்கும் நிபுணர் குழுவினை திரும்பப் பெற்று, புதிதாக அனைத்து மாநிலங்கள் சார்பில் உறுப்பினர்களை அந்தக் குழுவில் அமைக்கவேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleலாரன்ஸ் படமும் OTT தளத்தில் வெளியாகிறதா?
Next articleஇந்த தேதியில்தான் ரிலிஸ் ஆகிறதா வலிமை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here