முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு

Photo of author

By Anand

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு

Anand

Edappadi Palanisamy

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு

தமிழ் திரைத்துறையில் இயக்குனரும்,நடிகராகவும் வலம் வந்தவர் தான் சீமான்.பின்னாளில் இவர் தமிழ் தேசிய அரசியலை முன்னிலைபடுத்தி நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.தொடர்ந்து தனது பேச்சாலும்,வித்தியாசமான கொள்கைகளாலும் தமிழக மக்களின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுள்ளார்.

தொடர்ந்து கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தங்களுடைய வாக்கு வங்கியை உயர்த்தி வருகிறது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவினாலும் தங்களுடைய வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.சீமானின் தந்தையின் மறைவிற்கு முன்னாள் முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் தந்தை திரு. செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
https://twitter.com/EPSTamilNadu/status/1392803178777776132
திரு.செந்தமிழன் அவர்களை இழந்துவாடும் திரு.சீமான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.