தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக மறுத்த ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நட்ந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ கலவரம் குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த ’துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது. கூட்டத்துக்குள் சமுக விரோதிகள் புகுந்துவிட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியதை அடுத்து சமூக விரோதிகள் என்று யாரை ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என்பதை அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் எழுப்பிய கோரிக்கைகளை அடுத்தே விசாரணை கமிஷன் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விசாரணையை மேற்கொண்டு வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியை அழைத்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பியது.இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார். நான் அங்கு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த பதிலைக் கேலி செய்யும் பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்’ என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா? ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?…. இது எப்டி இருக்கு?! ’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.