சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. கார் கண்ணாடி உடைப்பு!! நீலாங்கரையில் பரபரப்பு??

Photo of author

By Vijay

சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. கார் கண்ணாடி உடைப்பு!! நீலாங்கரையில் பரபரப்பு??

Vijay

Seeman's controversial speech
சென்னை: சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து த பெ தி க வினர் கார் கண்ணாடியை உடைத்ததில் பரபரப்பு.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வாறு பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, இந்நிலையில் பெரியார் குறித்த சீமானின் கொச்சை பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் இன்று கடலூரில் செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியார் தமிழ் மொழியை சனி என்று கூறியதை ஆதரிப்பதாக வதந்தி கூறியதாக விமர்சித்துள்ளார். மேலும், அவர், பெரியார் எந்த மொழியில் எழுதினாரோ, அங்கு அவர் சொன்ன கருத்துக்களில் சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல் ஆகியவை இல்லாதவை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் பெரியாரின் அடிப்படைகளில் தவறு இருப்பதாகவும், தமிழ் மொழியை இழிவாக மாற வைக்கும் தன்மை கொண்டதாகவும் கூறினார். மேலும் தொடர்ந்து பேசுகையில் தந்தை பெரியார் ஒரு பேச்சில் உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்” என கூறியதாக விளக்கினார். மேலும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சென்னையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமானை கண்டித்து, த.பெ.தி.க.வினர்கள் நீலாங்கரையில் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இது ஊரளாவிய கவனத்தை பெற்ற நிலையில், போலீசார் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட  த.பெ.தி.க.வினரை கைது செய்தனர்.