ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி!
அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் சாதனையைப் பார்க்கும்போது, இந்த அணி சில பெரிய தொடர்களை வென்று நாட்டிற்கு ஏராளமான விருதுகளை கொண்டு வந்தாலும், ஐசிசி போட்டிகளில் எப்போதும் தடுமாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது என்றும் கபில் கூறினார்.
இந்நிலையில் மற்றொரு முன்னாள் வீரரான சேவாக் இந்திய அணியில் இருக்கும் மூத்த வீரர்களை தூக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் “அடுத்த முறை இந்திய அணி டி 20 போட்டிக்கான உலகக்கோப்பை தொடருக்கு செல்லும்போது மூத்த வீரர்கள் யாரும் இருக்கக் கூடாது. 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு சென்ற இளம் அணி போல செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் மற்றும் கோலி ஆகியோர்தான் மூத்த வீரர்களாக உள்ளன. ஆனால் கோலி, தனது உச்சபட்ச பார்மில் இருக்கிறார். அதனால் கோலியைத் தவிர மற்றவர்கள் அடுத்த உலகக்கோப்பை தொடரில் இருப்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த தொடரிலும் கோலி, தவிர மற்ற எந்த சீனியர் வீரரும் சிறப்பாக விளையாட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.