ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈரோடு பஸ் நிலைய பகுதியில் முறையில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளில் மற்றும் சைவர்கள் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டுச் செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்த் குமார் தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.
மேலும் பஸ் நிலையத்தில் முறையில்லாமல் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள் சைக்கிள்கள் சிலர் நிறுத்தி செல்கின்றனர். மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் கடை போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பகுதிக்கு சென்று நிறுத்தினார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் எடுத்து வைத்துள்ளனர். இது குறித்து டவுன் ஆனந்த் குமார் ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு என்று மாநகராட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் அந்த இடத்தில் சிலர் முறையாக வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள் ஆனால் கடந்த சில நாட்களாகவே பஸ் நிலையத்திற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தாமல் பார்க்கும் இடதில் மற்றும் கடை முன்பும் ஓரமாகவும் நிறுத்திவிட்டு செல்லும் காரணத்தால் தான் மர்ம நபர்கள் கள்ளச்சாவியை போட்டு வாகனங்களை திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது எனவும் இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.