அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

0
307
Sekar Babu DMK
Sekar Babu DMK

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகர் பாபு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அமைச்சராக பதவியேற்றது முதல் அறநிலைத்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

குறிப்பாக தமிழகம் முழுவதும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் சொத்துக்கள் மற்றும் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

அடுத்து அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அதிரடி திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்தினார்.இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தாலும் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவரின் இந்த அதிரடியான செயல்பாடுகளை திமுகவினரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அமைச்சர் சேகர் பாபுவால் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து என சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்ற இளைஞர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, ” நான் சென்னை ஓட்டேரியில் வசித்து வருகிறேன். நானும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணியும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தோம். இந்த விஷயம் எங்களின் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. ஜெயகல்யாணி அமைச்சரின் மகள் என்பதால், பெண் தரப்பிலிருந்து எங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து நாங்கள் இருவரும் எங்காவது சென்றுவிடலாம் என முடிவெடுத்து, மும்பைக்கு சென்றோம். அங்கிருந்து வேறு எங்காவது செல்லலாம் என திட்டமிட்டு இரயில் டிக்கெட் முன்பதிவு செய்கையில், எங்களின் ஆதார் கார்டு தகவலை வைத்து மும்பையில் இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்து எங்களை பிடித்தனர். நான் விருப்பப்பட்டு வந்தேன் என பெண் தெரிவித்தும், நீங்கள் சென்னை காவல் நிலையத்திற்கு வந்து இதுகுறித்து வாக்குமூலம் அளித்து செல்லுங்கள் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டார்கள்.

இதனையடுத்து அவர் தற்போது எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதனால் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது குடும்பத்தினரை தாக்குகிறார்கள். எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு எதாவது நடந்தால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு.எங்களை சித்ரவதை செய்து பிரித்துள்ளார்கள். தளபதி மு.க ஸ்டாலின் இதில் தலையிட்டு எங்களை காப்பாற்ற வேண்டும் ” என்று அதில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதே நேரத்தில் காவல்துறையினர் தரப்பில் இது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை என்றும் தெரிகிறது.இந்த விவகாரத்தில் எந்த அளவிற்கு உண்மையுள்ளது என்று அறியும் முன்பே அமைச்சருக்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதில் குறிப்பாக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்,ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதுகுறித்து ட்விட்டரில் வெளியான சில விமர்சன பதிவுகள்

Previous articleஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!
Next articleநீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன்