தண்ணீரைப் போன்று காற்றையும் டப்பாவில் அடைத்து விற்பனை!! பிரபல நிறுவனம் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

கிணறுகளிலும் ஆறுகளிலும் ஏரிகளிலும் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருந்த காலம் போய், இன்று மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் உள்ளது.

இனிவரும் காலங்களில் காற்றினையும் இவ்வாறு அடைத்து விற்பனை செய்யக்கூடிய காலம் வரும் என்று பேச்சுவாக்கில் பேசிக் கொண்டிருந்த நிலை போய், அதனை ஒரு நிறுவனம் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது.

தற்பொழுது உள்ள காலகட்டங்களில் தூய்மையான காற்று என்பது பெரும்பாலான இடங்களில் கிடைக்காமல் உள்ளது. இதற்காக தான், தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இந்த டப்பாவை வாங்கி காற்றை சுவாசிக்கலாமாம். இதனை communica என்ற நிறுவனம் இத்தாலியில் உள்ள கோமா ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் விற்பனை செய்கிறது.

இந்த தூய காற்று 400 ML விலை 907 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த காற்றை வாங்கி சுவாசித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொழில் ரீதியாக விலை உயரக்கூடலாம். உதாரணமாக தூய தண்ணீரின் விலையானது அது கொடுக்கப்படும் பாட்டிலை பொருத்தும் அமைவதாக தற்பொழுது உள்ளது. இதனைப் போன்று தற்பொழுது டின்னில் அடைத்து விற்பனை செய்யப்படும் இந்த காற்றானது நாளை விலை உயர்ந்த டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொழுது இதன் விலை இன்னும் உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.