கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!!

0
34
If you ask for an opportunity without any shyness, you will be lucky!! The idea is that the ladder makes you yearn like this!!
If you ask for an opportunity without any shyness, you will be lucky!! The idea is that the ladder makes you yearn like this!!

கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!!

இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தற்பொழுது எந்த படத்தையும் இயக்குவதில்லை. நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் பீஸ்ட் ,சாணி காயிதம் , பகாசுரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார்.இப்பொழுது அதிக அளவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் வேலையில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முடிவடைந்த பிறகு தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி தானே நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் படத்திற்கான பூஜை எந்த வித சத்தமும் இல்லாமல் சென்னையில் உள்ள ஈசிஆரில் நடந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் செட்டு போட்டு பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் தனுஷ் அவர்களுடன் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான் ,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.இந்த முழு விவரத்தையும் தெரிந்து கொண்ட செல்வராகவன்  தனுஷின் 50  வது படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு நேரடியாக கேட்டுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த செல்வராகவன் அசுரனிடம் வாய்ப்பு கேட்டது என் தவறுதான் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரை வளர்த்துவிட்ட அவரை இன்று ஏங்க விடுவது தவறு என்று சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் அவரின் 50 வது படத்தில் செல்வராகவன் நடித்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

author avatar
Parthipan K