SK க்கு ஜோடியாகும் ரௌடி பேபி!!  வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!! 

0
29
Rowdy Baby paired with SK!! A Bollywood hero who becomes a villain!!
Rowdy Baby paired with SK!! A Bollywood hero who becomes a villain!!

SK க்கு ஜோடியாகும் ரௌடி பேபி!!  வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!!

சிவகார்த்திகேயன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவருக்கு தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் அவர் மெரினா , எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் , ரெமோ போன்ற வெற்றி படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் நீங்க இடம் பிடித்தார்.  தற்போது இவர் நடித்த மாவீரன் படம் ஜூலை 14  ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் மாவீரன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கு அடுத்ததாக அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின்  ராஜ்கமல் புரொடக்ஷனில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது அவரின் 21 வது படமாகும் . மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர்  ராகுல் போஸ் நடிக்கவிருக்கிறார்.

ஏற்கனவே  ராகுல் போஸ்   கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் அவர் தமிழில் எந்த ஒரு  படமும்  நடிக்கவில்லை தற்போதுதான் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்  இதனால் படத்தில் பயங்கரமான சண்டை காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

author avatar
Jeevitha