மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்!

மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்!

சென்னையில் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நிர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும். எச்சரிக்கை அளிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் உள்ள எரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24.00 அடியாகும் மற்றும் முழு கொள்ளளவு 3645  மில்லியன் கன அடி ஆகும். இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.48 மற்றும் முழு கொள்ளவு 3500 கன அடியாக உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நிர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 12 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கின் வழியாக 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே காவனூர் குன்றத்தூர் திருமுடிவாக்கம் மற்றும் அடையாறு போன்ற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும்  பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் சென்னையில் நகரப்பகுதிகள் வெள்ளததால் பாதிக்க கூடிய வாய்ப்பு  இருக்காது எனவும் பொதுப்பணி துறை அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Comment