செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது; முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம்

0
158

செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.தற்பொழுது இந்த தொற்று பரவலை அடுத்து ஆறாம் கட்டமாக ஜூலை 31 வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தொற்றில் இருந்து தமிழகம் இன்னும் வெளியில் வரவில்லை.இந்நிலையில் நாடு முழுவதும் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.இதனை அடுத்து செமஸ்டர் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனை அடுத்து செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த இயலாது,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

முதல் அமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்த இயலாது என்றும் தேர்வுகளை எப்பொழுது நடத்த வேண்டும் என்பதை மாநில அரசே தீர்மானிக்கும் உரிமையை வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleசிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!
Next articleபிச்சை எடுத்த 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அதிசய மனிதர்.!!